பிரெக்சிற் திட்டத்துக்கு மாற்று இல்லை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பாக, ஐ.இராச்சியப் பிரதமர் தெரேசா மே சமர்ப்பித்துள்ள திட்டம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்துக்கு மாற்றான திட்டமொன்று இருப்பதாகத் தெரியவில்லை என, பிரதமர் மே தெரிவித்துள்ளார்.
பிரெக்சிற் தொடர்பான வரைவுத் திட்டம், ஐ.இராச்சிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கிகாரம் பெறப்பட்டாலும், அதன் பின்னர், அமைச்சர்கள் பலர், தமது பதவிகளிலிருந்து விலகியிருந்தனர். அதேபோல், அமைச்சரவையில் தொடர்ந்து காணப்படும் பலரும், இந்த வரைவுத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முனைகின்றனர் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியில், நேற்று (18) வெளியான பத்திரிகையொன்றில் தனது பத்தியொன்றில், தனது கருத்துகளை, பிரதமர் மே வெளிப்படுத்தியுள்ளார். “மாற்றுத் திட்டமொன்று இதுவரை இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேறான அணுகுமுறையொன்று இல்லை.
“இத்திட்டத்தை நா ‘பிரெக்சிற் திட்டத்துக்கு மாற்று இல்லை’ டாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தால், மீண்டும் பழைய நிலைக்கே எங்களைக் கொண்டுபோய் விடுவர். அதன்மூலமாக, மேலும் அதிகமான பிளவும் ஸ்திரமற்ற நிலையும் பிரித்தானிய மக்களின் வாக்குகளுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாத நிலையும் ஏற்படும்” என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையால் அங்கிகரிக்கப்பட்ட இந்த வரைவுத் திட்டம், நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கிடையில், பிரதமர் மே-ஐ விலக்குவதற்கான முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து அவரை நீக்குவதற்கான போட்டியை ஏற்படுத்துவதற்கு, 48 உறுப்பினர்களில் கையெழுத்துகள் தேவையென்ற நிலையில், 20க்கும் மேற்பட்டோர், அவ்வாறான முயற்சியில் கையெழுத்திட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

अन्य समाचार

मुख्य समाचार

उपर